Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நாளுக்குநாள் நலிவடையும் சுங்குடி சேலை உற்பத்தி! நெசவாளர்கள் வேதனை

நாளுக்குநாள் நலிவடையும் சுங்குடி சேலை உற்பத்தி! நெசவாளர்கள் வேதனை
பல வகை சுங்குடி சேலைகள்.

குஜராத்தை பூர்வீகமாக கொண்ட சௌராஷ்டிரார்கள் நெசவு தொழிலை தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களை மன்னர் திருமலை நாயக்கர் மதுரைக்கு அழைத்து வந்து குடியமர்த்தினார்.

பகிரவும் WhatsApp Facebook

புவிசார் குறியீடு பெற்ற மதுரை சுங்குடி உற்பத்தி நாளுக்குநாள் மிகவும் நலிவடைந்து வருகிறது. இதனால் நெசவாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.

மதுரைக்கு பெருமை சேர்க்கும் அடையாளங்களில் ஒன்றாக சுங்குடி சேலை வரலாறு சுவாரசியமானது. குஜராத்தை பூர்வீகமாக கொண்ட சௌராஷ்டிரார்கள் நெசவு தொழிலை தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களை மன்னர் திருமலை நாயக்கர் மதுரைக்கு அழைத்து வந்து குடியமர்த்தினார். இவர்கள் நெய்த சேலை மதுரை சுங்குடி சேலை என்று பெயர் பெற்றது. `சுங்கு’ என்ற தெலுங்கு சொல்லே சுங்குடி (கட்டுதல்) என மறுவியதாக கூறுகின்றனர்.

சுங்குடி சேலைக்கு, கடந்த 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனால் உலக அளவில் இத்தொழிலுக்கு புதிய அங்கீகாரம் கிடைத்தது. ஆனால், மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் சுங்குடி சேலை தொழில் தற்போது நலிவடைந்து வருகிறது.

இதுகுறித்து மதுரை சுங்குடிச்சேலை உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்க தலைவர் மோதிலால் கூறியதாவது: மதுரை சுங்குடி சேலைக்கு உள்ளூர், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. தரத்துக்கேற்ப ரூ.500 முதல் ரூ.10,000 வரையிலான விலையில் விற்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.14 கோடி வரை சுங்குடி வர்த்தகம் நடைபெறுகிறது.

சுங்குடி சேலைக்கு அதிக தேவை இருந்தும் அதை நிறைவு செய்யும் வகையில் தற்போது சப்ளை செய்ய முடியவில்லை. துணிகளுக்கு சாயம் ஏற்றுதல், கலவை, டையிங், காய்ச்சுதல் உள்ளிட்ட பல பிரிவுகளாக பணிகள் நடைபெறுகிறது. ஒரு காலத்தில் சுமார் 5000 ஆயிரம் பேர் பணிபுரிந்த இடத்தில் தற்போது 1,500க்கும் குறைவானவர்களே உள்ளனர். இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கடந்த 1955ம் ஆண்டு சுங்குடி சேலை உற்பத்தியை குடிசை தொழிலாக அங்கீகரித்து விற்பனை வரியில் விலக்கு அளித்தது. 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமலான பிறகு அந்த சலுகை நின்றுபோனது. தற்போது மத்திய, மாநில அரசுகளுக்கு தலா 2.5 சதவீதம் வீதம் மொத்தம் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்துகிறோம். புவிசார் குறியீடு பெற்ற மதுரை சுங்குடி உற்பத்தி நாளுக்குநாள் மிகவும் நலிவடைந்து வருகிறது.

எனவே, சுங்குடி சேலைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சுங்குடி உற்பத்தி தொழில் தொடர்பாக இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், மூலப் பொருட்கள், தயாரிப்பு பொருட்கள் மானிய விலையில் வழங்க வேண்டும். இதனால் அழிந்துவரும் இத்தொழிலை பாதுகாக்க முடியும். இவ்வாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுங்குடி சேலை விற்பனையாளர் ஓ.ஜி.சரவணன் கூறுகையில், "சுங்குடி சேலைக்கு தற்போது இளம் தலைமுறை பெண்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. திருவிழா, விசேஷ நிகழ்ச்சிகளில் குழு, குழுவாக ஒரே வடிவிலான புடவையை வாங்கி அணிகின்றனர். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் மட்டுமின்றி மற்ற காலங்களிலும் விற்பனை சீராகவே உள்ளது. இத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 8-ம் தேதி சுங்குடி தினம் கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமான இந்தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முந்தைய செய்தி
நிலத்தைத் தோண்டாமல் யுரேனியம் எடுக்கும் சீனா
அடுத்த செய்தி
சீன ஏஐ சந்தையில் தடம் பதிக்கும் இந்திய நிறுவனங்கள்

தொடர்புடைய செய்திகள்